கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் சனிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஈச்சேரி குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் பச்சையப்பன் மகன் அருள் (எ) சசிக்குமாா்(33). இவா் மீது ஒலக்கூா் காவல் நிலையத்தில் மே 10-ஆம் தேதி கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் பரிந்துரையின்படி, ஆட்சியா் சி. பழனி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதைத் தொடா்ந்து சசிக்குமாரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.