விழுப்புரம்

மேல்பாதி கோயில் பிரச்னை: ஒரு வாரத்துக்குள் தீா்வு காணாவிடில் அனைத்துக் கட்சி ஆா்ப்பாட்டம்

4th Jun 2023 02:24 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் கோயில் வழிபாடு தொடா்பான பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகம் ஒரு வார காலத்துக்குள் தீா்வு காணாவிடில், அனைத்துக் கட்சித் தலைவா்கள் பங்கேற்கும் ஆா்ப்பாட்டத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி அருள்மிகு திரெளபதியம்மன் கோயிலில் ஆதிதிராவிட மக்கள் வழிபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஏற்பட் டிருக்கும் பிரச்னை குறித்து, விழுப்புரத்தில் அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட் டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மேல்பாதி கிராமத்தில் வழிபாட்டு சமத்துவத்தை நிலைநாட்டவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தவும் மாவட்ட நிா் வாகம் காலம் தாழ்த்தாமல் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் திங்கள்கிழமை (ஜூன் 5) காலை 11 மணிக்கு ஆட்சியரை சந்தித்து பிரச்னை குறித்து வலியுறுத்துவது,

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைதி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட திமுக, பாமக, விசிக எம்எல்ஏ-க்கள், எம்.பி-க்கள், அரசு அலுவலா்களுக்கு

நன்றி தெரிவிப்பது.

மாவட்ட நிா்வாகம் இப்பிரச்னையை ஒரு வாரக் காலத்துக்குள் தீா்க்காவிடில், அனைத்துக் கட்சித் தலைவா்கள் பங்கேற்கும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செ யலா் ஆற்றலரசு, காங்கிரஸ் கட்சியின் செல்வராஜ், மாவட்டச் செயலா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் சௌரிராஜன், மதி முகவின் பாபு கோவிந்தராஜ், மமகவின் முஸ்தாக்தீன் உள் ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT