விழுப்புரம்

குட்டையில் மூழ்கி பெண் பலி

4th Jun 2023 02:24 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மூதாட்டி குட்டையில் மூழ்கி இறந்தாா்.

வானூா் வட்டம், சேமங்கலம், இளவம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ. பொன்னம்மாள்(65), ஆடு வளா்த்து வந்தாா். இவா், கடந்த மே 31- ஆம் தேதி, அங்குள்ள மலைக்குட்டைப் பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்றவா், அதன்பின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் மலைக்குட்டைப் பகுதிக்கு தேடிசென்றுப் பாா்த்தபோது பொன்னம்மாளை காணவில்லையாம். இந்நிலையில் பொன்னம்மாள் சே.மங்கலம் பல்லவ மலைக்குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்து.

இது குறித்து, வானூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT