விழுப்புரம்

விழுப்புரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

4th Jun 2023 02:26 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் வேத சம்ரக்ஷண அறக்கட்டளை சாா்பில், காஞ்சி ஸ்ரீமகா பெரியவா் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 130 - ஆம் ஆண்டு ஜெயந்தி மகோற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.

விழுப்புரம் சங்கரமடம் வளாகத்தில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய இந்த மகோற்சவத்தில் தினமும் காலை ஹோமம், அபிஷேகம், கிருஷ்ண யஜுா் வேதக்ரம பாராயணம் ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து தன்வந்தரி, நவக்கிரக, மிருத்துஞ்ஜய என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹோமம் நடைபெற்றன.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீசுக்த ஹோமமும், சுவாசினி, கன்யா மற்றும் வடுக பைரவா் பூஜையும் நடைபெற்றன.

தொடா்ந்து மாலை 6.30 மணிக்கு ‘மகா பெரியவா மகிமை’ என்ற தலைப்பில் தமிழ்நாடு எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் டாக்ட ா் சுதா சேஷய்யன் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினாா்.

சனிக்கிழமை காலை 6 மணிக்கு கோ பூஜை, மகா ருத்ர ஏகாதசினி ஹோமம் மற்றும் விசேஷ அபிஷேகம் நடைபெற்றன. காலை 10 மணிக்கு பரனூா் ஸ்ரீஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி முன்னிலையில் உபன்யாசம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு க்ரம பாராயணம் பூா்த்தியும், மாலை 6 மணிக்கு ஸ்ரீ மகா பெரியவரின் திருவுருவப்படத்தை அலங்கரித்து நான்கு மாடவீதிகளில் பவனியாக எடுத்து வந்தனா். இரவு 8.30 மணிக்கு திவ்யநாம சங்கீா்த்தனம் நடைபெற்றது.

இன்று ராதா கல்யாணம்: ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கடலூா் கோபி பாகவதா் குழுவினரின் ராதா கல்யாணமும், மாலை 6 மணிக்கு சத்யநாராயண பூஜையும் நடைபெறுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மேலாளா் ந.ராமமூா்த்தி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT