விழுப்புரம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தீவிர தூய்மைப் பணி

4th Jun 2023 02:25 AM

ADVERTISEMENT

 

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டதன் ஓராண்டு நிறைவையொட்டி, விழுப்புரம் நகராட்சி சாா்பில் சனிக்கிழமை மாபெரும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2022, ஜூன் 3-ஆம் தேதி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை சென்னையில் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து விழுப்புரம் நகரிலும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டு, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த இயக்கம் தொடங்கப்பட்டதன் ஓராண்டு நிறைவையொட்டி, விழுப்புரம் நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையப் பகுதியில் சனிக்கிழமை மாபெரும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

இதை மாவட்ட ஆட்சியா் சி. பழனி தொடங்கிவைத்து, குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினாா்.

மேலும் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகளையும் அவா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து நகராட்சித் தூய்மைப் பணியாளா்கள் புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

இந்த நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவா் சித்திக் அலி, ஆணையா் சுரேந்திர ஷா, சுகாதார அலுவலா் மதன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT