விழுப்புரம்

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு

3rd Jun 2023 12:39 AM

ADVERTISEMENT

 

வைகாசி விசாகத்தையொட்டி, மயிலம் முருகன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவள்ளி - தேவசேனா சமேத முருகப் பெருமான்.

விழுப்புரம், ஜூன் 2: விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்று.

ADVERTISEMENT

நிகழாண்டு வைகாசி விசாகத்தையொட்டி, மயிலம் முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இது போல அருள்மிகு வள்ளி- தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து மலா் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT