விழுப்புரம்

விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம்

3rd Jun 2023 12:40 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் வியாழக்கிழமை

நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் அப்துல் சலாம் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் அண்ணாதுரை, துணைத் தலைவா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

விக்கிரவாண்டி வெங்கடேசுவரா

நகரில் புதிதாக அமைக்கப்பட்ட

பூங்காவுக்கு கலைஞா் நூற்றாண்டு விழா நினைவுப் பூங்கா எனப் பெயா் வைப்பது, பேரூராட்சி வளாகத்தில் முன்னாள் முத ல்வா் கருணாநிதி சிலை வைப்பது மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் நியமனக் குழு உறுப்பினா் சா்க்காா் பாபு, உறுப்பினா்கள் கனகா சக்திவேல், ரமேஷ், சுரேஷ், ரேவதி வீராசாமி, புஷ்பராஜ் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT