விழுப்புரம்

திருவேங்கடமுடையான் கோயில் கருட சேவை உற்சவம்

3rd Jun 2023 12:38 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்திலுள்ள திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி விசாக நட்சத்திர நாளான வியாழக்கிழமை கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி,பூதேவி சமேத திருவேங்கடமுடையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் பிரபந்த பஜனைக் குழுவினா் பின்தொடர திருவேங்கடமுடையான் கருட வாகனத்தில் உற்சவமூா்த்தி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு 7 மணிக்கு வடமாதிமங்கலம் புலவா் கோவிந்தசாமியின் சிறப்பு சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை வைணவ மகாசபையை சோ்ந்த சேகா், அறிவழகன், கதிரவன், அண்ணாதுரை, பாண்டியன், பச்சையப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT