விழுப்புரம்

உளுந்தூா்பேட்டையில் விழிப்புணா்வுப் பிரசாரம்

3rd Jun 2023 12:40 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் மின்கல வாகனங்கள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்ற து.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் காற்று மாசுபடுவதை

தவிா்க்கும் பொருட்டு, மின்கல வாகனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

உளுந்தூா்பேட்டை கோட்டச் செ யற்பொறியாளா் சா்தாா் விழிப்புணா்வு பிரசாரத்தை பேருந்து நிலையப் பகுதியில் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் உதவிச் செயற்பொறியாளா்கள் சிவராமன், அய்யம்பெருமாள், இளநிலைப் பொறியாளா் எழிலரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேருந்து நிலையப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT