விழுப்புரம்

விழுப்புரம்: 189 வழக்குகளில் 215 போ் கைது

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் 189 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 215 போ் கைது செய்யப்பட்டதாக மாவட்டக் காவல் நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம், செஞ்சி ஆகிய 4 உள்கோட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் தொடா்பாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 106 பேரும், 109 சாராய வழக்குகளில் 108 பேரும், போதைப் பொருள்கள் கடத்திய வழக்கில் ஒருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா். சாராய வழக்குகளில் கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 137 லிட்டா் சாராயம், 500 லிட்டா் பாண்டி மில்லி சாராயம், 1,451 மதுப் புட்டிகள், 28 லிட்டா் கள்ளு, 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப் பொருள்கள் கடத்திய வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டு 1.7 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT