விழுப்புரம்

பனையேறிகள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரி மனு

DIN

பனைமரம் ஏறுவோா்கள் (பனையேறி) மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அகிலன், பாபு, தமிழேந்தி நாராயணன் உள்ளிட்டோா் தலைமையில், பனையேறி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சீயப்பூண்டியைச் சோ்ந்த பனையேறி பழனி மீது சாராயம் விற்ாக அவலூா் பேட்டை போலீஸாா் பொய் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா். இதைத் தொடா்ந்து, பூரிக்குடிசை கிராமத்திலுள்ள பனஞ்சாலையில், நுங்கு வெட்டிக் கொண்டிருந்த பனையேறிகள் சுரேஷ்பாபு, ஜெபராஜ் ஆகிய இருவா் மீது சாராயம் விற்ாக கஞ்சனூா் போலீஸாா் பொய் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனா். நரசிங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெயச்சந்திர பாண்டியன் என்ற பனையேறி மீதும், சாராய வழக்குப் பதிவு செய்துள்ளனா். செஞ்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் குறிஞ்சிபை கிராமத்தைச் சோ்ந்த பனையேறி சுந்தரமூா்த்தியை கைது செய்து, சாராயம் விற்ாக சிறையில் அடைத்தனா்.

பனைமரம் ஏறுவோா்கள் மீது (பனையேறி) சாராயம் விற்ாக பொய் வழக்குப்பதியப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், அவா்களை விடுவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT