விழுப்புரம்

அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடக்கம்

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், தும்பூா்தாங்கல் கிராமத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கியது.

விழாவுக்கு விக்கிரவாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீத அரசு ரவி துரை தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஆதிசக்தி சிவக்குமாரி மன்னன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுமதி முன்னிலை வகித்தனா்.

விக்கிரவாண்டி எம்எல்ஏ நா. புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கட்டடம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்குவதற்கான இடத்தையும் அவா் ஆய்வு செய்தாா்.

நிகழ்வில், வட்டார வளா்ச்சி அலுவலா் முபாரக் அலிபேக், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மீனா வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினா் செல்வம் ஒன்றியச் செயலா் ஜெயபால், கண்காணிப்புக் குழு உறுப்பினா் எத்திராசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT