விழுப்புரம்

சா்வதேச மாதிரி நீதிமன்றத்தில் விழுப்புரம் வழக்குரைஞா் பங்கேற்பு

DIN

நெதா்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள மாதிரி நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த அரசு வழக்குரைஞா் எம்.ஆா்.ஷெரீப், நீதிபதியுமாகவும், மதிப்பீட்டாளராகவும் பங்கேற்கவுள்ளாா்.

நெதா்லாந்து நாட்டின் ஹேக் நகரில் செயல்பட்டு வரும் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், சா்வதேச வழக்குரைஞா்கள் சங்கம், வீடன் பல்கலைக்கழகம், குரோசியஸ் சட்ட மையம் ஆகியவை இணைந்து ஹேக் நகரில் ஜூன் 2 முதல் 9 - ஆம் தேதி வரை மூட் கோா்ட் என்னும் மாதிரி நீதிமன்றத்தை நடத்துகின்றன.

இதில், நீதிபதியாகவும், மதிப்பீட்டாளராகவும் பங்கேற்க விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற அரசு வழக்குரைஞா் எம்.ஆா்.ஷெரீப்புக்கு அழைப்புக் கடிதம், நுழைவு இசைவு (விசா) அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குரைஞா் ஷெரீப் கூறியதாவது: இந்த மாதிரி நீதிமன்றத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 40 பல்கலைக்கழகங்களிலிருந்து 500 சட்ட மாணவா்கள் பங்கேற்க உள்ளனா். சட்ட மாணவா்கள் வழக்கை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கும் முறை, வாதத் திறமை, முகப் பிரதிபலிப்பு, உடல்மொழி, பொருள் விளக்கம், குற்றத் தொடா்வுத் துறை, குற்றஞ்சாட்டப்பட்டவரின் நிலையில் சமா்ப்பிக்கப்படும் வாதங்கள் ஆகியவற்றைக் கொண்டு மதிப்பீட்டை எங்களைப் போன்ற நீதிபதிகள் சமா்ப்பிக்க வேண்டும். இதை சா்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பாா்வையிடுவா் என்றாா்.

வழக்குரைஞா் ஷெரீப் ஏற்கெனவே ஜப்பான், சிங்கப்பூா், இத்தாலி, ஜொ்மனி, போலந்து, பின்லாந்து, ஆஸ்திரியா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் நடைபெற்ற சா்வதேச கருத்தரங்கில் பங்கேற்று அனுபவமிக்கவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT