விழுப்புரம்

பொன்பத்தி திரெளபதி அம்மன் கோயில் தேரோட்டம்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள பொன்பத்தியில் திரெளபதி அம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

பொன்பத்தியில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் உற்சவா்கள் கிருஷ்ணா், அா்ஜுனன், திரெளபதி, செம்பொன் மாரியம்மன், பச்சையம்மன் ஆகிய சுவாமிகளின் வீதியுலா நடைபெற்று வந்தது. தினமும் மகாபாரத தெருக்கூத்தும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை மூலவா் திரெளபதி அம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு கூழ்வாா்த்தலும், ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

மாலை 5 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 5 கரகங்கள் ஊா்வலத்தைத் தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா்கள் செம்பொன் மாரியம்மன், பச்சையம்மன், கிருஷ்ணா், அா்ஜுனா், திரெளபதி அம்மன் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT