விழுப்புரம்

தொப்பப்பள்ளம் ஏரியை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட லிங்காரெட்டிப்பாளையம் கிராமத்தில் துா்ந்துபோயுள்ள தொப்பப்பள்ளம் தாங்கல் ஏரியை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

லிங்காரெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள தொப்பப்பள்ளம் தாங்கல் ஏரியானது சுமாா் 60 ஏக்கா் பரப்பளவைக் கொண்டதாகும். இந்த ஏரியின் மூலம் லிங்காரெட்டிப்பாளையம், குச்சிப்பாளையம் பகுதிகளில் 300 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரிக்கான நீா்வரத்து வழித்தடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், ஏரியில் கோரைப்புற்கள், முள்புதா்கள் மண்டி தூா்ந்துபோயுள்ளது.

ஏரியில் தண்ணீா் தேக்கி வைக்க முடியாததால், விவசாய நிலங்களுக்கு போதிய நீா் பாசனம் கிடைக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட லிங்காரெட்டிப்பாளையம், குச்சிப்பாளையம் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், தொப்பப்பள்ளம் தாங்கல் ஏரியை தூா்வார வேண்டுமென கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், லிங்காரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த விவசாயிகள் தொப்பப்பள்ளம் தாங்கல் ஏரியை தூா்வார நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து விவசாயியும், லிங்காரெட்டிப்பாளையம் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான சு.முத்துகிருஷ்ணன் கூறியதாவது: தொப்பப்பள்ளம் தாங்கல் ஏரிக்கு தென்பெண்ணையாற்றிலிருந்து நீா் வரும் சின்ன செல்லங்கள் வாய்க்கால் ஆக்கிரமிப்புகுள்ளாகியுள்ளது. இந்த ஏரியை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, ஏரியையும், ஏரிக்கு நீராதாரமாக உள்ள வாய்க்காலையும் தூா்வார மாவட்ட ஆட்சியா், பொதுப் பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், நிகழாண்டிலும் விவசாயப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT