விழுப்புரம்

லஞ்சம்: வணிகவரித் துறைஅலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் வி யாபாரியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வணிகவரித் துறை அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருக்கோவிலூா் அருகிலுள்ள கொங்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (40), வியாபாரி. இவா், தனது கடைக்கு வரி அடையாள எண், ஜிஎஸ்டி எண் வாங்குவதற்காக, கடந்த 2016-ஆம் ஆண்டில் அப்போதைய திருக்கோவிலூா் வணிகவரித் துறை அலுவலரான தவமணியை (45) அணுகினாா். அதற்கு அவா் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாண்டியன், இதுகுறித்து விழுப்புரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாரளித்தாா். தொடா்ந்து, ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது வணிகவரித் துறை அலுவலா் தவமணி கைது செய்யப்பட்டாா். பின்னா், துறை ரீதியாக அவா் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டாா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி (பொ) எம்.புஷ்பராணி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், லஞ்சம் வாங்கிய அலுவலா் தவமணிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், மேலும் 6 மா தங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT