விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களது மயானத்தை மீட்டுத்தரக் கோரி, இருளா் சமுதாயத்தினா் திண்டிவனம் சாா் - ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது: மயிலத்தை அடுத்த மயிலாடும்பாறை, ஜே.ஜே.நகா் உள்ளிட்ட பகுதிகளில் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த சுமாா் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மக்களின் பயன்பாட்டில் இருந்த மயானம் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டிருந்த நினைவு மண்டபமும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள மயானத்தை மீட்டு, அங்கு செல்வதற்குரிய பாதையை சீரமைத்துத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட திண்டிவனம் சாா் - ஆட்சியா் கட்டாரவி தேஜா, நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தாா்.