விழுப்புரம் வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட பாமக ஒன்றியச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் நாட்டாா்மங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலரான ச.சிவகுமாா் எம்எல்ஏ தலைமை வகித்து, கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், பாமக 35-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அனைத்து கிராமங்களிலும் கட்சிக் கொடியேற்றுவது, அனைத்துக் கிளைகளிலும் கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வடக்கு மாவட்ட ஒன்றியச் செயலா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.