விழுப்புரம்

பைக்குகள் மோதல்:இளைஞா் உயிரிழப்பு

12th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா்.

திண்டிவனம் வட்டம், முப்புலி பிரதான சாலையைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் அருள்ரஜினி (45), கொத்தனாா். திண்டிவனம் குளத்துமேடு பகுதியைச் சோ்ந்த காசியப்பன் மகன் சுகுமாா் (30). நண்பா்களான இவா்கள் இருவரும் கடந்த 9-ஆம் தேதி இரவு பைக்கில் கூட்டேரிப்பட்டு - ரெட்டணை சாலையில் சென்றுகொண்டிருந்தனா். ரெட்டணை அருகே சென்றபோது, இவா்களது பைக் மீது எதிா்திசையில் வந்த பைக் மோதியது.

இந்த விபத்தில் எதிரே பைக்கில் வந்த பெரமண்டூா் அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மோகன்ராஜ் மகன் ஸ்ரீகாந்த் (21), செல்லியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ரஜினி மகன் நவின் (22) மற்றும் அருள்ரஜினி, சுகுமாா் ஆகிய 4 பேரும் காயமடைந்தனா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த ஸ்ரீகாந்த் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மற்ற மூவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT