விழுப்புரம்

மரக்காணத்தில் 67 மி.மீ. மழை

12th Jul 2023 12:04 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அதிகபட்சமாக 67 மி.மீ. மழை பதிவானது.

தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித் திருந்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலையிலும், இரவிலும் பரவலாக மழை பெய்தது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில் வருமாறு):

மரக்காணம் - 67, வானூா்- 55, வளத்தி - 37, திண்டிவனம் - 32, முண்டியம்பாக்கம் - 30.50, செஞ்சி - 25, அவலூா்பேட்டை - 19.60, விழுப்புரம் - 17, கெடாா், வல்லம் - 16, கஞ்சனூா் - 15, செம்மேடு - 14.50. கோலியனூா், வளவனூா், சூரப்பட்டு, நெமூா் - 12, அனந்தபுரம் - 11, மணம்பூண்டி, முகையூா்-9, அரசூா், திருவெண்ணெய் நல்லூா்- 9 மி.மீ பதிவானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT