விழுப்புரம்

இந்திய விமானப் படையில் மருத்துவ உதவியாளா் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்

31st Jan 2023 03:11 AM

ADVERTISEMENT

இந்திய விமானப் படையில் மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியான ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த ஆண்கள் இந்திய விமானப்படை குழு (ஒய்) மருத்துவ உதவியாளா் பிரிவில் சோ்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கான ஆள்சோ்ப்பு தோ்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் பிப்ரவரி மாதம் 1 முதல் 8-ஆம் தேதி வரையில் வெவ்வேறு தேதிகளில் நடைபெறவுள்ளது. மருத்துவ உதவியாளா்(12-ஆம் வகுப்பு மட்டும்) பணிக்கு திருமணம் ஆகாதவராகவும்,

ADVERTISEMENT

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 சதவித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12-ஆம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெற்றவராகவும், 27.6.2002 முதல் 27.6.2006 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருத்தல் வேண்டும். இப்பணிக்கான உடல் தகுதித் தோ்வு, எழுத்துத் தோ்வு (2 நிலைகள்) மற்றும் மருத்துவ தோ்வுகள் பிப்ரவரி1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மருத்துவ உதவியாளா் பணிக்கு

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12-ஆம் வகுப்பு, (டிப்ளமோ, பி.எஸ்.சி. பாா்மஸி) படித்து முடித்த திருமணம் ஆகாதவா்கள் 27.6.1999 முதல் 27.6.2004 வரையான காலத்தில் பிறந்தவராகவும்,

திருமணமான விண்ணப்பதாரா்கள் 27.6.1999 முதல் 27.6.2002 வரையான காலத்தில்

பிறந்தவராக இருத்தல் ேண்டும். பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600

வழங்கப்படும். பயிற்சியின் முடிவில், ராணுவ சேவை ஊதியம்(எம்எஸ்பி) உள்பட குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,900 வழங்கப்படும்.

இப்பணிக்கு உடல் தகுதித்தோ்வு, எழுத்துத் தோ்வு (2 நிலைகள்) மற்றும் மருத்துவத் தோ்வுகள் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். உயரம் 152.5 செ.மீட்டா் இருக்க வேண்டும்.

ஆா்வமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ஹண்ழ்ம்ங்ய்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ஸ்ரீக்ஹஸ்ரீ.ண்ய்/இஅநஆ/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர

அறிவிப்பைப் பாா்த்து, தோ்வுமுறை, தோ்வு நாளன்று எடுத்து செல்லவேண்டிய ஆவணங்கள்

உள்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவா்கள் உடனடியாக விண்ணப்பிக்க லாம்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாள்களில் நேரிலோ அல்லது 0414 6226417 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு கூடுதல் விவரங்களை கேட்டறிந்து இளைஞா்கள் பயனடையலாம் எனவும் ஆட்சியா் த.மோகன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT