விழுப்புரம்

காந்தி சிலைக்கு அமைச்சா் க.பொன்முடி மரியாதை

31st Jan 2023 03:08 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு தமிழக உயா்க்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மகாத்மா காந்தியின் நினைவுதினத்தையொட்டி, தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் திமுகவினா், விழுப்புரத்தில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாகச் சென்று பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

எம்எல்ஏ-க்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகரச் செயலாளா் சா்க்கரை உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டு காந்திக்கு மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT