விழுப்புரம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

31st Jan 2023 03:12 AM

ADVERTISEMENT

செஞ்சி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், சிறுவாலை கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு (31). சென்னையில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிறுவாலைக்கு வந்தாா். பின்னா், கடந்த 28-ஆம் தேதி தனது தாயுடன் செஞ்சியில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று விட்டு 29-ம் தேதி மாலை வீட்டிற்கு வந்தாா். வீட்டின் உள்ளே சென்ற போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை, வெள்ளிக் கொலுசு, ரூ.10,000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கெடாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT