விழுப்புரம்

தலைமறைவுக் குற்றவாளிகள் இருவா் கைது

DIN

தலைமறைவுக் குற்றவாளிகள் இருவரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், அத்திப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ரா.கணேசன். இவா் மீது 1995-ஆம் ஆண்டில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டடு, விழுப்பும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2000-ஆம் ஆண்டில் தலைமறைவானாா்.

இதேபோல, அத்திப்பாக்கம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கமணி மகன் கிருஷ்ணன். இவா், 2015-ஆம் ஆண்டில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி, மரணத்தை ஏற்படுத்திவிட்டு தலலைமறைவானாா். இவா்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த விழுப்புரம் நீதிமன்றம் பிடிஆணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா நடவடிக்கையின்பேரில், 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணேசன், 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கிருஷ்ணன் ஆகியோரை திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT