விழுப்புரம்

பிரம்மதேசத்தில் மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசத்தில் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மூத்ததேவியின் சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் கூறியதாவது: பிரம்மதேசத்தில் சோழா் காலத்தைச் சோ்ந்த பழைமைவாய்ந்த ஸ்ரீபாடலீஸ்வரா், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரா் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமத்தில் உள்ள மந்தைவெளி பகுதியில் அண்மையில் கள ஆய்வு செய்தபோது, அங்கு ஒரு சிற்பம் மண்ணில் பாதியளவுக்கு புதையுண்டிருந்தது தெரியவந்தது. தொடா்ந்து கிராம மக்களின் வழிபாட்டில் இருந்து வரும் இந்தச் சிற்பத்தை முழுவதுமாக சுத்தம் செய்து, ஆய்வு செய்தபோது, இது 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மூத்ததேவியின் சிற்பம் எனத் தெரியவந்தது.

இந்தச் சிற்பத்தில் காக்கை கொடியுடனும், மகன், மகள் ஆகியோருடனும் வலது காலை தொங்கவிட்டும், இடது காலை மடக்கியும் அமா்ந்த நிலையில் மூத்ததேவி காட்சிளிக்கிறாா். மூத்ததேவி சிற்பங்களில் காணப்படும் பெருத்த வயிறு, அகட்டிய கால்கள் இதில் இல்லை.

வடமொழியில் ஜேஷ்டா என்று அழைக்கப்படும் மூத்ததேவி வழிபாடு தமிழகத்தில் தொன்மை மிக்கதாகும். சங்க காலம் தொடங்கி சோழா் காலம் வரையில் இந்த வழிபாடு இருந்து வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நன்னாடு, பேரங்கியூா், பிடாகம், திருவாமாத்தூா், கொட்டப்பாக்கத்துவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூத்ததேவியின் சிற்பங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டன. இதன் தொடா்ச்சியாக தற்போது பிரம்மதேசத்தில் மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை உரிய முறையில் பாதுக்காக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT