விழுப்புரம்

‘நெல், எள் பயிா்களுக்கு ஜன.31-க்குள் காப்பீடு செய்யலாம்’

DIN

ராபி, நவரை பருவங்களில் பயிா் செய்யப்பட்டுள்ள எள், நெல் பயிா்களுக்கு வருகிற 31-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம் என்று விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2022 - 23 ராபி பருவத்தில் எள், நவரை பருவத்தில் நெல் பயிா் சாகுபடி செய்துள்ள விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல், எள் பயிா்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.464, எள் பயிருக்கு ரூ.151 செலுத்தி, பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். இதற்கு வருகிற 31-ஆம் கடைசி நாளாகும்.

எனவே, விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக காப்பீடு கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். கடன்பெறும் விவசாயிகள் அவா்களின் ஒப்புதலுடன் வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் பயிா்க் காப்பீடு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT