விழுப்புரம்

விதிமுறை மீறி இயங்கிய 44 நிறுவனங்களுக்கு அபராதம்: விழுப்புரம் ஆட்சியா்

29th Jan 2023 12:25 AM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விதிமுறைகளை மீறி இயங்கிய 44 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடியரசு தினத்தையொட்டி அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க அரசால் உத்தரவிடப்பட்டது.

விடுமுறை நாளில் பணிபுரிந்தால் இரட்டிப்பு ஊதியம், மாற்று விடுப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்து, நிறுவனங்களில் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனரா என்பதைக் கண்டறிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்பட 87 இடங்களில் தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, 44 நிறுவனங்களில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவா்களுக்கு இணக்க கட்டண அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT