விழுப்புரம்

ரேஷன் கடைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நியாய விலைக் கடை பயன்பாட்டுக்கு 4ஜி வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரம் வழங்க வேண்டும், பதிவாளா் அறிக்கையின்படி பதவி உயா்வு வழங்க வேண்டும், வீட்டிலிருந்து 20 கி.மீ-க்கு அப்பால் பணிபுரியும் நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரே இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கே.சம்பத் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் வி.சிவக்குமாா் முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். மாவட்டத் தலைவா் கோபிநாத், பொருளாளா் ரஷீத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT