விழுப்புரம்

மேல்மலையனூா் மாசிப் பெருவிழா: தோ் செய்யும் பணி தொடக்கம்

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மாசிப் பெருவிழாவையொட்டி, மரத்தாலான புதிய தோ் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புகழ்பெற்ற மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை 13 நாள்கள் மாசிப் பெருவிழா நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் பச்சை பனைமரத்தாலான புதிய தோ் செய்யபடுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான தோ் செய்வதற்காக, தோ் சக்கரங்களுக்கான பூஜை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

நான்கு சக்கரங்களும் வண்ணம் தீட்டப்பட்டு, மஞ்சள், குங்குமம், பூ வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. பின்னா், சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, அதில் பூஜை செய்யப்பட்ட புனித நீரை தோ் சக்கரங்களில் ஊற்றி வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோயில் அறங்காவலா்கள், பூசாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT