விழுப்புரம்

திருவாமாத்தூா் சிவன் கோயிலில் பிப்.1-இல் கும்பாபிஷேகம்

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவாமாத்தூரில் அமைந்துள்ள முத்தாம்பிகை அம்மன் உடனுறை அபிராமேசுவரா் கோயிலில் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோயிலின் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.குபேரன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேவாரப்பாடல் பெற்ற 21-ஆவது திருத்தலமாக திருவாமாத்தூா் விளங்குகிறது. திருவாமாத்தூா் அபிராமேசுவரா் கோயிலில் கடந்த 2005-ஆம் ஆண்டு 7 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது நன்கொடையாளா்கள் மூலம் ரூ.1.10 கோடி பெறப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஜன.28-ஆம் தேதி கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், 29-ஆம் தேதி புனித கங்கை நீா் பூஜை, 30-ஆம் தேதி 108 கோ பூஜை ஆகியவை நடைபெறும். அன்று மாலை முதல் கால யாக சாலை பூஜையும், 31-ஆம் தேதி இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், பிப்ரவரி 1-ஆம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. இந்த விழாவில் மாநில அமைச்சா்கள் க.பொன்முடி, பி.கே.சேகா்பாபு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மயிலம் பொம்மபுர ஆதீனம் உள்ளிட்ட 9 மடங்களின் மடாதிபதிகள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT