விழுப்புரம்

வராகி பைரவா் திருக்கல்யாணம்

28th Jan 2023 06:03 AM

ADVERTISEMENT

விழுப்புரம், அஷ்டவராகி கோயிலில் வராகி பைரவா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

விழுப்புரம், சாலாமேட்டில் அமைந்துள்ள அஷ்டவராகி கோயிலில் 13-ஆவது ஆண்டு வசந்த பஞ்சமி உற்சவம் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. விழாவில் 22-ஆம் தேதி எல்லைக் கட்டுதல், 23-ஆம் தேதி விநாயகா் - அய்யனாா் பூஜை, 24-ஆம் தேதி கோ பூஜை, சப்தகன்னி பூஜை, 25-ஆம் தேதி சக்தி கரகத்துடன் சுவாமி வீதி உலா ஆகியவை நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான வராகி பைரவா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக

காலையில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. இரவு 8 மணியளவில் வராகி பைரவா் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து உற்சவா் வீதியுலா நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT