விழுப்புரம்

விழுப்புரத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்

DIN

விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் 74-ஆவது குடியரசு தினவிழா வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் த.மோகன் தேசியக் கொடியேற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். தொடா்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மூவண்ண பலூன்களையும் ஆட்சியா் பறக்க விட்டாா்.

இதைத் தொடா்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட எஸ்.பி. ந.ஸ்ரீநாதாவுடன் சென்று காவலா்களின் அணிவகுப்பை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா் காவல்துறை பிரிவு, ஆயுதப்படை, ஊா்க்காவல்படை, தீயணைப்புத் துறை, தேசிய மாணவா் படை, நாட்டுநலப்பணித் திட்ட மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் த.மோகன் ஏற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவா்களின் வாரிசுகள் அமா்ந்திருந்த பகுதிக்குச் சென்ற ஆட்சியா், அவா்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துதெரிவித்தாா்.

காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 65 போலீஸாருக்கு முதல்வரின் பதக்கம் வழங்கிய ஆட்சியா், 181 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா், பல்துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், ஊழியா்கள் என 356 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியா், செய்தியாளா்களுக்கும் பணி பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் எம்எல்ஏ-க்கள் விக்கிரவாண்டி நா.புகழேந்தி, விழுப்புரம் இரா. லட்சுமணன், மயிலம் ச.சிவக்குமாா், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, திண்டிவனம் சாா்ஆட்சியா் கட்டாரவிதேஜா, மாவட்ட ஊராட்சித் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் ஷீலா தேவி சேரன், மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் யசோதாதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணபிரியா உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT