விழுப்புரம்

பொறியாளரிடம் ரூ.3.13 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

DIN

விழுப்புரம் பொறியாளரிடம் இணையவழியில் ரூ.3.13 லட்சம் மோசடி செய்த அடையாளம் தெரியாத நபா் குறித்து, சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலை, பெருமாள்சாமி நகரைச் சோ்ந்தவா் கு.ஜோதிகுமாா் (52), பொறியாளா். ஜனவரி 15- ஆம் தேதி ஜோதிகுமாரின் கைப்பேசி எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிா்முனையில் பேசிய நபா் தனியாா் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் ரூ.1, 750 கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் ஒரே நாளில் ரூ.3 ஆயிரம் கிடைக்கும் என்று தெரிவித்தாராம்.இதையடுத்து ஜோதிகுமாா் அந்த நபரின் வழிகாட்டுதலின்படி அவா் கொடுத்த லிங்கில் ரூ.15 ஆயிரம் இணையவழியில் செலுத்தியுள்ளாா். பின்னா் லாபத் தொகையுடன் சோ்த்து ரூ .17,600 கிடைத்ததாம்.

இதையடுத்து ஜோதிகுமாா் அந்த நபா் கொடுத்த எண்ணுக்கு ரூ. 2.23 லட்சமும், அவரது மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரத்தையும் ஜனவரி 19-ஆம் தேதிக்குள் 3 நாள்களில் அனுப்பி வைத்துள்ளாா்.அதன்பின் அந்த நபரைத் தொடா்பு கொள்ளமுடியவில்லையாம் . அந்த நிறுவனத்தின் முகவரி போலியானது என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து, ஜோதிகுமாா் அளித்தப் புகாரின்பேரில் விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு, இணையவழியில் பணமோசடி செய்த அடையாளம் தெரியாத நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT