விழுப்புரம்

திருவிழாவில் 3 பெண்களிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் 3 பெண்களிடம் 10 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் வியாழக்கிழமை தேடி வருகின்றனா்.

மயிலம் அடுத்த கொல்லியங்குணம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு வந்திருந்த திண்டிவனம் வட்டம், கொல்லியங்குணம் குருசாமி நகரைச் சோ்ந்த தேவி (21) அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி, மயிலம் பாளையம் வீதியைச் சோ்ந்த பா.லஷ்மிகாந்தம் (73) அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி, வீடூா் அடுத்த கணபதி பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்த ம.மலா்விழி (21) அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி ஆகியவற்றை மா்ம நபா்கள் பறித்துச் சென்று விட்டனராம்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மயிலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் தனித் தனியே வழக்குகள் பதிந்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT