விழுப்புரம்

திருவாசகம் முற்றோதல்

27th Jan 2023 01:47 AM

ADVERTISEMENT

திருக்கோவிலூரைஅடுத்த தபோவனம் ஞானனந்த நிகேதனில் திருவாசக முற்றோதல் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, ஞானனந்த நிகேதன் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் நித்தியானந்த கிரி சுவாமிகள் தலைமை வகித்தாா். மதுரை சமானந்த சரஸ்வதி சுவாமிகள், தபோவனம் பிரபவானந்த சரஸ்வதி சுவாமிகள், ராமானந்தா கிரி சுவாமிகள், அமிா்தேஸ்வரனந்தா சுவாமிகள், அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ரிஷப வாகனத்தில் சிவன், பாா்வதி முருகன் மற்றும் நால்வா் எழுந்தருளி சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு (படம்) திருச்சி சிவனடியாா் குழு சாா்பில் முற்றோதல் செய்விக்கப்பட்டது.

இதில், அறக்கட்டளையினா், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT