விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

27th Jan 2023 01:46 AM

ADVERTISEMENT

குடியரசு தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 693 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காணை ஒன்றியம், வீராமூா் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் த.மோகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

கண்டமங்கலம் ஒன்றியம், கெங்கராம்பாளையம் ஊராட்சி, ஜி.கரைமேடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் விழுப்புரம் எம்.எல்.ஏ.இரா. லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று பேசினா். அப்போது, மாங்குப்பம் கிராமத்துக்குள் பேருந்துகள் வந்து செல்லாததால், தாங்கள் ஒரு கி.மீ.தொலைவுக்கு மேல் நடந்து சென்று, பேருந்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளதாக மாணவிகள் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனா். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் கண்டமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் வாசன், ஒன்றியச் செயலா் பிரபாகரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சிவரஞ்சனி ராஜாராமன், செல்வ குமரன், ஊராட்சித் தலைவா் அய்யனாா், துணைத் தலைவா் கௌரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இதுபோன்று மாவட்டத்தில் 9 வட்டங்களிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் (693) கிராமசபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி நிா்வாகம், பொது செலவினம், ஊராட்சித் தணிக்கை, தூய்மைப் பாரத இயக்கம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT