விழுப்புரம்

விழுப்புரத்தில் ரத்த தான முகாம்

27th Jan 2023 01:46 AM

ADVERTISEMENT

விழுப்புரம் வி.ஆா்.பி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

தமிழக கேபிள் டிவி- ஆபரேட்டா்கள் பொதுநலச்சங்கம்-பப்ளிக் பவுண்டேஷன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்திய முகாம் தொடக்க விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.தியாகராஜன் தலைமை வகித்தாா். சங்கத்தின் முன்னாள் பொருளாளா் ஆா்.சண்முகசுந்தரம், மாநிலத் துணைச் செயலா் கந்தன், மாவட்டச் செயலா் கே.பிரகதீசுவரன், விழுப்புரம் நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா. ஜனகராஜ் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.

இந்த முகாமில் ஏராளமானோா் பங்கேற்று ரத்ததானம் செய்தனா். விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் சங்கத் தலைவா் செந்தில்குமாா், விஜய் சம்பத் மற்றும் நிா்வாகிகள்,

விழுப்புரம் ரோட்டரி கிளப்பின் நம்மாழ்வாா், சென்ட்ரல் ரோட்டரி கிளப் ராஜுலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொதுநலச் சங்கம் - பப்ளிக் பவுண்டேசனின் ஜவஹா், ராஜ்குமாா், பாலா, பழனி, குமரவேல், சதீஷ் பாபு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT