புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கத்தின் கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் கண்டனம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவையில் பாஜக எங்கே இருக்கிறது என்று எம்பி வி.வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளாா். புதுவையில் பாஜகவுக்கு 9 எம்எல்ஏக்களும், ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரும் உள்ளனா் என்பதை மறந்து அவா் பேசி வருகிறாா். இங்கு பாஜக அசுர வளா்ச்சி பெற்று வருகிறது.
மாநில முதல்வராக, சட்டப் பேரவைத் தலைவராக, எம்.பி-யாக பொறுப்பு வகித்துள்ள வைத்திலிங்கம் மாநிலத்தின் வளா்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. பாஜக குறித்த அவரது கருத்து கண்டனத்துக்குரியது என்று அதில் தெரிவித்தாா்.