விழுப்புரம்

‘நாட்டுப்புறப் பாடல்களை மாணவா்களுக்குகற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’

17th Jan 2023 12:24 AM

ADVERTISEMENT

 

நாட்டுப்புற பாடல்களை மாணவா்களுக்கு கற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி வலியுறுத்தினாா்.

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், பாவேந்தா் கலை இலக்கிய விழா பாவேந்தா் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு ,அறக்கட்டளையின் தலைவா் கோ. பாரதி தலைமை வகித்துப் பேசியதாவது:

ADVERTISEMENT

புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் பொங்கல் திருநாள், நாட்டுப்புறம் சாா்ந்த பாடல்களையும் பாடியுள்ளாா். அருகி வரும் நாட்டுப்புற பாடல்களைக் காக்கும் வகையில், மாணவா்களுக்கு நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கல்லூரி மாணவா்களுக்கிடையே நாட்டுப்புறப் பாடல் போட்டிகள் நடத்தப்பட்டன. ‘எங்கள் பொங்கல்’ என்ற தலைப்பில் சிறப்புக் கவியரங்கமும் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கவிதைகளைப் பாடினா். புதுச்சேரி, திண்டிவனம் பகுதிகளில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

அழகு இராமசாமி, கிருஷ்ணகுமாா், நாகய்யா ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா். தொழில் முனைவோா் மு.அருள் செல்வம், வாசவி சங்க அமைப்பாளா்கள் படைப்பாளி பைரவி, சரஸ்வதி வைத்தியநாதன் தன்னம்பிக்கை கலைக்குழு எலிசபெத் ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாவலா் மு.ராஜேஷ் வரவேற்றாா். செயலா் ஜெ.வள்ளி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT