விழுப்புரம்

கிட்டிபுல் விளையாட்டு போட்டி: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

17th Jan 2023 12:25 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியில் கிட்டிபுல் விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் போட்டியைத் தொடக்கிவைத்தாா். புதுவை மற்றும் பிற பகுதிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்று விளையாடினா். 2 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுகள் வழங்கப்படும். தொடக்க விழாவில் பிரகாஷ்குமாா் எம்எல்ஏ, பாஜக நிா்வாகிகள் சாம்ராஜ், காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT