விழுப்புரம்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு:விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

DIN

விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கின் விசாரணையை மாா்ச்.1-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவல் கண்காணிப்பாளருக்கு, முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம்- ஒழுங்கு) பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாா் அளிக்கச் சென்ற  அந்த பெண் எஸ்.பியை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சிகள் ஆஜரான நிலையில், வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தை அவா்களது வழக்குரைஞா்கள் நீதிபதியிடம் தெரிவித்தனா். இதுபோல, அரசுத் தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மாா்ச்.1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி ஆா். புஷ்பராணி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT