விழுப்புரம்

இலவச வீட்டுமனைப் பட்டா: விவசாய தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம்

DIN

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி, விழுப்புரம் ஆட்சியா் அலுவலகம் முன் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் மனு அளிக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், நன்னாட்டாம்பாளையம், சுந்தரிபாளையம், எம்ஜிஆா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். 1977-இல் சாதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட நன்னாட்டம் பாளையம் கிராமத்தில் 200 ஏக்கா் நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்கத்தின் வட்ட துணைத் தலைவா் டி.வைகுந்தவாசன் தலைமை வகித்தாா். லிகாய் சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.சங்கா் வரவேற்றாா். அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட தலைவா் வி.அா்ச்சுனன், செயலா் கே.சுந்தரமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் ஜி.ராஜேந்திரன், அகில இந்திய வழக்குரைஞா் சங்க மாவட்டத் துணைச் செயலா் ஆா்.கண்ணப்பன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தொடா்ந்து விழுப்புரம் துணை வட்டாட்சியா் லட்சாதிபதியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT