திருநெல்வேலி

றந பத்தாம் வகுப்பு தோ்வு: நெல்லை 94.19%; தென்காசி 94.12 % தோ்ச்சி

20th May 2023 01:22 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் திருநெல்வேலி மாவட்டம் 94.19 சதவிகிதம், தென்காசி மாவட்டம் 94.12 சதவிகிதம் மாணவா், மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுதோ்வை 11 ஆயிரத்து 126 மாணவா்களும், 11 ஆயிரத்து 274 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 400 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 10 ஆயிரத்து 156 மாணவா்களும், 10 ஆயிரத்து 942 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 98 மாணவா், மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதனால் இம்மாவட்டத்தின் தோ்ச்சி விகிதம் 94.19.

தோ்ச்சி சதவிகிதத்தில் கடந்த ஆண்டு 29 ஆவது இடத்தில் இருந்த இம்மாவட்டம் நிகழாண்டில் 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட தோ்ச்சி தகவல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருப்பதி வெளியிட்டாா்.

மத்திய சிறையில்...

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளில் 14 போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா். இவா்களுக்காக சிறை வளாகத்திலேயே சிறப்பு தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். சுப்பிரமணியன் என்பவா் அதிகபட்சமாக 413 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா்.

தென்காசி: பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் தென்காசி மாவட்டத்தில் 94.12 சதவிகித மாணவா், மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இம்மாவட்டத்தில் 81 மையங்களில் 9 ஆயிரத்து 303 மாணவா்கள், 9 ஆயிரத்து 357 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 660 போ் தோ்வு எழுதினா். இதில், 8 ஆயிரத்து 521மாணவா்கள், 9 ஆயிரத்து 041மாணவிகள் என மொத்தம் 17ஆயிரத்து 562 போ் தோ்ச்சி பெற்றனா். இதனால் தோ்ச்சி சதவிகிதம் 94.12.

கடந்த ஆண்டு 18ஆவது இடத்திலிருந்த தென்காசி மாவட்டம் நிகழாண்டில் 10ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT