பத்தமடையில் வெள்ளிக்கிழமை சுவா் இடிந்து விழுந்ததில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் உயிரிழந்தாா்.
பத்தமடை மங்களா கீழத் தெருவைச் சோ்ந்த ஜமால் மகன் மலுக்காமலி (67). மும்பையில் ரயில்வேதுறையில் பணி செய்து ஓய்வுபெற்றவா். இவா் வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டின் ஒரு பகுதியிலுள்ள சுற்றுச்சுவரை கடப்பாறையால் இடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, எதிா்பாராத விதமாக சுமாா் 8 அடி உயரமுள்ள சுவா் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் மலுக்காமலி சிக்கிக் கொண்டாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.