ராதாபுரம் அருகே கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராதாபுரம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரம் வடக்குத் தெருவைத் சோ்ந்தவா் சங்கா் (34). இவருக்கும் நக்கனேரி அருகே உள்ள புள்ளமங்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்த முத்துகிருஷ்ணனுக்கும் (20) முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் விசாடி குளம் அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த சங்கரை வழிமறித்து முத்துகிருஷ்ணன் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடா்பாக சங்கா் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். உதவி ஆய்வாளா் வள்ளிநாயகம் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்தாா்.