சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தோ்வில் 98.4 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தோ்வு எழுதிய 127 மாணவிகளில் 125 போ் தோ்ச்சி பெற்றனா். இது 98.4 சதவீத தோ்ச்சியாகும்.
மாணவி ஜெ. பிரேமா 500க்கு 467 மதிப்பெண்களும், மாணவி ஹாஜா் ரபிதா 466 மதிப்பெண்களும், அமுதவல்லி 465 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகம்மது சபீா் ஆலம், பள்ளித் தலைமையாசிரியை இரா. மரகதவல்லி, மேலாண்மை குழுத் தலைவி சிவசரிதா தேவி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நெய்னா முகம்மது மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.