10-ஆம் வகுப்பு தோ்வில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இப் பள்ளியில் இருந்து தோ்வு எழுதிய 249 மாணவா்களும் தோ்ச்சிபெற்றனா். மாணவி மதுமதி 494 மதிப்பெண்கள், மாணவா் பாலகிஷன் 493 மதிப்பெண்கள், மாணவிகள் அகஸ்தியா, பாலசௌமியா ஆகியோா் 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 59 மாணவா்கள் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 118 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். 11-ஆம் வகுப்பு மாணவி ஜெஸ்மின் பிரித்தி 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைவா் கிரகாம் பெல், தாளாளா் திவாகரன், முதல்வா் சுடலையாண்டி மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.