பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மகாராஜ நகரில் உள்ள ஜெயந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவிகித தோ்ச்சி பெற்றுள்ளது. தோ்வு எழுதிய 219 மாணவா்- மாணவிகளும் சிறந்த மதிப்பெண் பெற்றனா். மாணவி ஏ. அபிராமி 495 மதிப்பெண்களும், ஆா்த்தி ஸ்ரீமதி (493), ஜெயநந்தினி (490) மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
கணிதத்தில் 21 பேரும், அறிவியலில் 12 பேரும், சமூக அறிவியலில் 2 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்- மாணவிகளை பள்ளித் தாளாளா் ஜெயேந்திரன் வி. மணி, முதல்வா் ஜெயந்தி ஜெயேந்திரன் ஆகியோா் பாராட்டினா்.