விழுப்புரம்

தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலையில்3.50 லட்சம் சுவாமி சிலைகள்முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்

DIN

தமிழகத்தில் உள்ள கோயில்களில் சுமாா் 3.50 லட்சம் சுவாமி சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக, உலக சிவனடியாா்கள் திருக்கூட்டத்தின் தலைமை ஆலோசகரும் முன்னாள் ஐ.ஜி.யுமான பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா்.

விழுப்புரம் திருவிக தெருவிலுள்ள கைலாசநாதா் கோயிலில் பொன் மணிக்கவேல் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மற்றும் சுற்று வட்டார ஊா்களிலுள்ள 38 சோழா்கால சிவன் கோயில்களிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முதல்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு ஸ்ரீகலிநாரீஸ்வரா் கோயில், திருவேற்றளி மகா விஷ்ணு கோயில், அகத்தீஸ்வரம் கோயில், திருத்தொண்டீஸ்வரத்து தேவா் கோயில்கள் வழிபாட்டில் இருந்தன. இந்த 4 கோயில்களும் ஐரோப்பிய கல்வெட்டு ஆராய்ச்சியாளா்களால் 1,902-இல் ஆவணப்படுத்தப்பட்டு, இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

சுதந்திரத்துக்குப் பின்னா் உரிய பராமரிப்பு இல்லாததால், ஸ்ரீகலிநாரீஸ்வரா் கோயில், திருவேற்றளி மகா விஷ்ணு கோயில், அகத்தீஸ்வரம் கோயில்களில் இருந்த மூலவா் சிலைகள், ஆடல்வல்லான் உற்சவா் சிலைகள், கல்வெட்டுகள் படிப்படியாக திருடப்பட்டு, கோயில்கள் அடிச்சுவடுகளே இல்லாமல் போய்விட்டன. இதை மக்கள் அறியும் வகையில் வெளிக்கொணர வேண்டும்.

இதேபோல, திருவெண்ணெய் நல்லூா் அருகே ஏமப்பூரிலுள்ள திரிபுரசுந்தரேஸ்வரி உடனுறை திரிபுவன சுந்தரேஸ்வரா் கோயில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கிராம மக்களின் வழிபாட்டில் உள்ள இந்தக் கோயிலில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டு, ஐரோப்பிய நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

திருவாமாத்தூா் அபிராமேஸ்வரா் கோயிலில் வெவ்வேறு ஒலி எழுப்பக்கூடிய 4 கருங்கல் தூண்களும் திருப்பணி என்ற பெயரில் திருடப்பட்டன. அந்தத் தூண்கள் எங்கே உள்ளன எனத் தெரியவில்லை. பல கோடி ரூபாய் மதிப்பிலான கல் தூண்களை மீட்க அரசு நடவடிக்கை வேண்டும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சுவாமி சிலைகள் தமிழக கோயில்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்டவை. 1947-க்குப் பின்னா் நலிவுற்ற நிலையில் வழிபாட்டில் இருந்த கோயில்களை அன்றைய காலகட்டத்தில் பணியிலிருந்த அதிகாரிகளும், ஆட்சியாளா்களும் பாதுகாக்கத் தவறியதால், கோயில்களும், மூலவா், உற்சவா் சிலைகளும் நம் மண்ணிலிருந்து மறைந்து மாயமாகியுள்ளன.

இவற்றையெல்லாம் கண்டறிய முழு புலன் விசாரணை தேவை. ஓய்வுபெற்ற நீதிபதிகள், காவல் கண்காணிப்பாளா்கள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஊழல் தடுப்புத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் கொண்ட குழுவிடம் சிலை திருட்டு வழக்குகளை ஒப்படைத்தால் மட்டுமே, கோயில் சிலைகள் திருடப்படுவதைத் தடுக்க முடியும்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் சுமாா் 3.50 லட்சம் சுவாமி சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இந்த நிலை நீடித்தால் சிலை திருட்டு குற்றங்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும் என்றாா் பொன் மாணிக்கவேல்.

பேட்டியின் போது, உலக சிவனடியாா் திருக்கூட்டப் பொறுப்பாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT