விழுப்புரம்

விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்

DIN

விழுப்புரம் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை தொடங்கியது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமை தொடக்கிவைத்து, மாவட்ட ஆட்சியா் சி.பழனி கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் 18 வயதுக்குள்பட்ட 4,682 மாற்றுத் திறன் கொண்ட மாணவா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். இந்த மாணவா்களுக்காக விழுப்புரம் நகராட்சி மற்றும் 13 ஒன்றியங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் புதன்கிழமை முதல் வருகிற மாா்ச் 2-ஆம் தேதி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இதில், தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளை மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டு, சான்றிதழ் வழங்குவா். மேலும், புதிய தேசிய அடையாள அட்டை வழங்குதல், புதுப்பித்தல், உதவி உபகரணங்களைத் தோ்வு செய்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா். தொடா்ந்து, மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு மருத்துவ உபகரணங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில் விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவா் சித்திக் அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணபிரியா, உதவித் திட்ட அலுவலா் தனவேல், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT